மேற்கு வங்க மாநிலம் டார்ஜிலிங்கில் கனமழை காரணமாக ஏற்பட்ட கோர நிலச்சரிவில் சிக்கி குழந்தைகள் உள்பட 20 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த இக்கட்டான சூழலில் அங்கு தேசிய, மாநில பேரிடர் மீட்பு குழுவினர் இணைந்து தீவிரமான மீட்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தில், வீடுகள் அடித்துச் செல்லப்பட்டன, சாலைகள் துண்டிக்கப்பட்டன, கிராமங்கள் தனிமைப்படுத்தப்பட்டன. மேலும் நூற்றுக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் இதில் சிக்கித் தவித்து வருகின்றனர்.