19-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி அடுத்த ஆண்டு (2026) நடக்கவுள்ளது. இந்நிலையில், இந்த போட்டிகளுக்கான வீரர்களின் மினி ஏலம் அடுத்த மாதம் (டிசம்பர்) 16-ந்தேதி நடத்தப்படுகிறது. ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள அபுதாபியில் இந்த ஏலம் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் தொடர்ந்து 3-வது முறையாக ஏலத்தை வெளிநாட்டில் இந்திய கிரிக்கெட் வாரியம் நடத்தவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.