மாமனாரை கொடூரமாக கொலை செய்த மருமகளுக்கு ஆயுள் தண்டனை

6172பார்த்தது
மாமனாரை கொடூரமாக கொலை செய்த மருமகளுக்கு ஆயுள் தண்டனை
திருத்தணி அருகே நெமிலி கிராமத்தில் 2019ஆம் ஆண்டு குடும்பத் தகராறில் மாமனார் சபாபதி (65) கொலை செய்யப்பட்ட வழக்கில், மருமகள் காயத்ரி (42) மற்றும் அவரது தாய் கலைவாணி (64) குற்றவாளிகள் என நிரூபிக்கப்பட்டனர். வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த சபாபதிக்கு மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்து எரித்ததாக விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து மாவட்ட நீதிமன்றம் இருவருக்கும் ஆயுள் தண்டனையும், தலா ரூ.25,000 அபராதமும் விதித்து தீர்ப்பளித்தது.

தொடர்புடைய செய்தி