கரூரில் நடந்த பொதுக் கூட்டத்தில் திமுக எம்பி தயாநிதி மாறன், கோவை மக்கள் குறித்து பேசும் வீடியோ வெளியாகியுள்ளது. இந்நிலையில், “கோவை மக்களை, 'அடுத்தவர்களைக் கெடுப்பவர்கள்' எனக் கெட்ட எண்ணத்துடன் எம்பி தயாநிதி மாறன் பேச, மேடையிலேயே அமர்ந்திருக்கும் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி சிரித்துக் கொண்டிருக்கிறார்” என தவெக அருண்ராஜ் குற்றம்சாட்டி பதிவு வெளியிட்டுள்ளார். மேலும், கோவை மக்களிடம் இருவரும் மன்னிப்பு கேட்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.