ஐபிஎல் 19வது சீசன் கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 10 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டு மோதுகின்றன. இந்த தொடரில் இன்று (ஏப்.8) டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெறும் 14வது லீக் ஆட்டத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் - குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதுகின்றன. இதில் டாஸ் வென்ற டெல்லி அணி பவுலிங் தேர்வு செய்துள்ளது. அதன்படி குஜராத் அணி பேட்டிங் செய்ய தயாராகவுள்ளது.