தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் தாக்கல் செய்யப்பட்ட வேட்புமனுக்களைத் திரும்பப் பெறுவதற்கான கால அவகாசம் இன்று (ஏப்.9) 3 மணி முதல் நிறைவடைந்துள்ளது. இத்தேர்தலுக்காக மாநிலம் முழுவதும் மொத்தம் 7,599 வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்த நிலையில், தேர்தல் அதிகாரிகளின் பரிசீலனைக்குப் பிறகு அவற்றில் 2,467 மனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன. தமிழகத்தில் வாக்குப்பதிவு வரும் 23ம் தேதி நடைபெறுகிறது.