தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் குரூப் 4 தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் நவம்பர் 8ஆம் தேதி நள்ளிரவு வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே நாளை (நவ.5) இரவுடன் விண்ணப்பிப்பதற்கான அவகாசம் நிறைவடைய இருந்த நிலையில், தேர்வர்களின் வசதிக்காக தற்போது கூடுதல் கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. இதனால் இதுவரை விண்ணப்பிக்காதவர்கள் நவம்பர் 8ஆம் தேதி நள்ளிரவு வரை விண்ணப்பிக்கலாம் என டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.