சாத்தான்குளம் தந்தை - மகன் கொலை வழக்கில் 9 போலீசாருக்கும் மரண தண்டனை விதித்து நீதிபதி முத்துக்குமரன் உத்தரவிட்டுள்ளார். இந்நிலையில், இதுகுறித்து ஜெயராஜ், பென்னிக்ஸ் குடும்பத்தார் அளித்த பேட்டியில், “இன்னொரு குடும்பம் இப்படி பாதிக்கப்படக்கூடாது. எங்களுடன் உறுதுணையாக இருந்த ஊடகங்கள், அமைப்புகள், உள்ளூர் மக்களுக்கு நன்றி. மரண தண்டனை வழங்கிய நீதிபதிக்கு நன்றி” என்றார்.