வெடி விபத்தில் பலி எண்ணிக்கை 20 ஆக உயர்வு

479பார்த்தது
ஆந்திர மாநிலம் காக்கிநாடா மாவட்டத்தில் நடந்த பட்டாசு ஆலை வெடி விபத்தில் பலி எண்ணிக்கை 20 ஆக உயர்ந்துள்ளது. வெட்லபாலம் மற்றும் ஜி.மேடபாடு இடையே அமைந்துள்ள பட்டாசு உற்பத்தி ஆலையில் இன்று (பிப்., 28) பயங்கர வெடி விபத்து ஏற்பட்டது. இதில், 20 பேர் உயிரிழந்த நிலையில், மேலும் 15 தொழிலாளர்கள் தீ விபத்தில் சிக்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்புத்துறையினர் தீயை அணைக்க போராடி வருகின்றனர். மேலும் பலி எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.

தொடர்புடைய செய்தி