மேகாலயாவில் சட்டவிரோத நிலக்கரி சுரங்கத்தில் ஏற்பட்ட விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 27ஆக உயர்ந்துள்ளது. கடந்த பிப்., 5ஆம் தேதி இந்த விபத்து நடந்தது. ஏற்கனவே 25 பேர் உயிரிழந்த நிலையில் மேலும் இருவரின் உடல்களை மீட்புப் படையினர் கண்டெடுத்தனர். கிழக்கு ஜைந்தியா ஹில்ஸ் மாவட்டத்தில் செயல்பட்ட சட்டவிரோத நிலக்கரி சுரங்கத்தில் தொடர்ந்து மீட்புப் பணிகள் நடந்து வருகிறது. சுரங்கத்தை நடத்தி வந்த உரிமையாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.