நாளை மறுநாள் (ஏப்.16) தாக்கல் செய்யப்படவுள்ள 131-வது அரசியல் சாசன திருத்த மசோதா எம்.பி.க்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது. இதன்படி, மக்களவைத் தொகுதிகளை 815 ஆகவும், யூனியன் பிரதேசத் தொகுதிகளை 35 ஆகவும் உயர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், 33 சதவீத இடஒதுக்கீடு மசோதா நிறைவேற்றப்பட்டால், நாடாளுமன்றத்தில் மகளிருக்கு 280 இடங்கள் கிடைக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.