IPL 2026 தொடரில் இன்று (மே 26) தர்மசாலாவில் நடக்கும் RCB vs GT பிளேஆஃப் போட்டியில், குஜராத்தின் டாப் ஆர்டருக்கும் ஆர்சிபியின் புவனேஷ்வர்-ஹேசில்வுட் கூட்டணிக்கும் இடையிலான பவர்பிளே மோதலே வெற்றியாளரை தீர்மானிக்கும் என தீப் தாஸ்குப்தா கணித்துள்ளார். லீக் சுற்றில் இரு அணிகளும் தலா 18 புள்ளிகள் பெற்றுள்ள நிலையில், இதில் வெல்லும் அணியே கோப்பையை கைப்பற்ற அதிக வாய்ப்புள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.