மு.க.ஸ்டாலின், செந்தில் பாலாஜி குறித்து அவதூறு வீடியோ

3787பார்த்தது
மு.க.ஸ்டாலின், செந்தில் பாலாஜி குறித்து அவதூறு வீடியோ
தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி குறித்து அவதூறாக வீடியோ வெளியிட்டதாக அதிமுக பிரமுகர் கைது செய்யப்பட்டுள்ளார். 
கரூர் வேலாயுதம்பாளையத்தைச் சேர்ந்தவர் பசுபதி செந்தில். இவர் அதிமுக ஐடி விங் மண்டல துணை தலைவராக உள்ளார். இதனிடையே அவர், வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இதுகுறித்து திமுக தரப்பில் அளிக்கப்பட்ட புகாரின் பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து பசுபதியை கைது செய்தனர்.