போதுமான அளவு தண்ணீர் குடிக்க தவறினால் தலைவலி ஏற்படும் என்பது உண்மைதான் என மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். நம் உடலில் நீரிழப்பு (Dehydration) ஏற்படும்போது தலைவலி உண்டாகும் என அவர்கள் தெரிவிக்கின்றனர். இதனால் மூளை சுருங்குவதோடு, நரம்புகளில் அழுத்தம் உண்டாகி சோர்வு, தலைச்சுற்றல் மற்றும் குமட்டல் போன்ற உபாதைகள் ஏற்படும். எனவே, அன்றாடம் சராசரியாக 3 லிட்டர் தண்ணீர் மற்றும் ஜூஸ் உள்ளிட்ட நீர்ச்சத்து நிறைந்த பானங்களை அருந்துவது அவசியம்.