தமிழக முதல்வராக விஜய் நாளை பதவியேற்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. ஆட்சியமைக்க உரிமை கோரிய விஜய், தமக்கு 118 எம்.எல்.ஏ-க்களின் ஆதரவு இருப்பதாக வாய்மொழியாகத் தெரிவித்துள்ளார். ஆனால், அதற்கான எழுத்துப்பூர்வமான ஆதரவு கடிதங்களை அவர் சமர்ப்பிக்காததால், ஆளுநர் ஆர்.வி. அர்லேக்கர் அதிருப்தி அடைந்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. போதிய மெஜாரிட்டியை உறுதிப்படுத்தும் ஆவணங்கள் இல்லாததால், பதவியேற்பு விழா தள்ளிப்போகும் சூழல் உருவாகியுள்ளது. இதனால் தமிழக அரசியலில் மீண்டும் பரபரப்பு தொற்றிக்கொண்டுள்ளது.