டெல்லி கார் வெடிப்பு சம்பவத்தில் காயமடைந்தவர்களிடம், இன்று (நவ.12) பிரதமர் மோடி நலம் விசாரித்தார். பூடானில் இருந்து டெல்லி திரும்பியதும் தனியார் மருத்துவமனைக்கு விரைந்து சென்ற பிரதமர் மோடி, அங்கு சிகிச்சைப் பெற்று வருபவர்களைச் சந்தித்து ஆறுதல் கூறினார். டெல்லியில் நேற்று முன்தினம் நடந்த கார் வெடித்த விபத்தில் சிக்கி இதுவரை 13 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.