மத்திய கிழக்கில் நிலவும்
போர் மற்றும் எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக, டெல்லி அரசு ஊழியர்கள் வாரத்தில் 2 நாட்கள் வீட்டிலிருந்தே பணியாற்ற (Work from home) முதல்வர் ரேகா குப்தா உத்தரவிட்டுள்ளார்.
பிரதமர் மோடியின் வேண்டுகோளை ஏற்று, பொருளாதார நெருக்கடியைச் சமாளிக்க இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதே நடைமுறையைத் தனியார் நிறுவனங்களும் பின்பற்றி ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என முதல்வர் கோரிக்கை விடுத்துள்ளார்.
நன்றி: நியூஸ் 18