டெல்லி செங்கோட்டை அருகே நேற்று (நவ.11) நடந்த கார் குண்டு வெடிப்பு நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. இது தொடர்பாக காரை ஓட்டி சென்றதாக கூறப்படும் மருத்துவர் உமரின் தாய் மற்றும் சகோதரர்களை போலீசார் காஷ்மீரில் கைது செய்துள்ளனர். மேலும், இந்த சம்பவம் தற்கொலைப்படை தாக்குதலாக இருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணை முடுக்கிவிடப்பட்டுள்ளது. வெடித்து சிதறிய காரில் உமர் மட்டுமே இருந்திருக்கலாம் என காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.