டெல்லி செங்கோட்டை மெட்ரோ ரயில் நிலையம் அருகே இன்று (நவ.10) மாலை 6:55 மணிக்கு கார் பார்க்கிங்கில் நிறுத்தப்பட்டிருந்த காரில் குண்டு வெடித்ததில் முன்னதாக 8 பேர் உயிரிழந்த நிலையில், மேலும் இருவர் உயிரிழந்த நிலையில், உயிரிழப்பு எண்ணிக்கை 10 ஆக அதிகரித்துள்ளது. மேலும் பலர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் சம்பவ இடத்தில் NIA அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.