டெல்லி செங்கோட்டை மெட்ரோ நிலையம் அருகே நேற்று (நவ.10) நிகழ்ந்த குண்டுவெடிப்பு சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் இச்சம்பவம் தொடர்பாக, ஹரியானா மாநிலம் ஃபரிதாபாத்தில் மருத்துவர் முஜாமில் ஷகில் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும், அவரது வீட்டில் இருந்து 350 கிலோ வெடிமருந்தை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். இதையடுத்து, மருத்துவர் தங்கியிருந்த பகுதிகளில் வீடு வீடாக சோதனையில் காவல்துறையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.