டெல்லியில் நேற்று (நவ.10) நடந்த கார் குண்டு வெடிப்பு சம்பவத்தை தொடர்ந்து, பாதுகாப்பு காரணங்களுக்காக செங்கோட்டை 3 நாட்களுக்கு மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த வெடிப்பில் 9 பேர் உயிரிழந்த நிலையில், 24 பேர் காயம் அடைந்துள்ளனர். இந்த சம்பவம் ஒரு தீவிரவாத தாக்குதலாக இருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளதால், செங்கோட்டை ரயில் நிலையமும் இன்று மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.