ஈரான்-இஸ்ரேல் இடையே நிலவி வரும் போர் சூழல் காரணமாக வளைகுடா நாடுகளின் வான்வழி பாதைகள் பாதிக்கப்பட்டுள்ளதால், சர்வதேச விமானங்கள் நீண்ட தூரம் சுற்றி செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. இதன் விளைவாக எரிபொருள் செலவு அதிகரித்துள்ளதை அடுத்து, இந்தியாவில் இருந்து வெளிநாடுகளுக்கு செல்லும் விமான கட்டணங்கள் பல மடங்கு உயர்ந்துள்ளன. குறிப்பாக, டெல்லியிலிருந்து லண்டன் செல்வதற்கான ஒரு வழி விமான கட்டணம் தற்போது சுமார் ரூ.9 லட்சமாக உயர்ந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.