டெல்லி கலவர வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள சமூக ஆர்வலரான ஷர்ஜீல் இமாமுக்கு கிட்டத்தட்ட ஆறு ஆண்டுகளுக்கு பிறகு டெல்லி நீதிமன்றம் 10 நாட்கள் இடைக்கால ஜாமின் வழங்கியுள்ளது. தனது சகோதரரின் திருமணத்தில் பங்கேற்கவும், நோய்வாய்ப்பட்ட தனது தாயைக் கவனித்துக் கொள்ளவும் 6 வார கால நிவாரணம் கோரியிருந்த நிலையில், நீதிமன்றம் 10 நாட்கள் மட்டும் அனுமதி அளித்துள்ளது. மேலும் அவருக்கு பல நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன.