டெல்லி பாரத் மண்டபத்தில் ‘ஏ.ஐ. உச்சி மாநாடு 2026’ நடைபெற்று வருகிறது. இதில், சுந்தர் பிச்சை கலந்துகொண்டார். இதுகுறித்து பிரதமர் மோடி வெளியிட்ட எக்ஸ் பதிவில், "டெல்லி AI உச்சி மாநாட்டில் சுந்தர் பிச்சையை சந்தித்ததில் மகிழ்ச்சி. AI-யில் இந்தியா செய்து வரும் பணிகள் பற்றியும் மற்றும் இந்தத் துறையில் நமது திறமையான மாணவர்கள் மற்றும் நிபுணர்களுடன் கூகுள் எவ்வாறு இணைந்து பணியாற்ற முடியும் என்பது குறித்தும் அவரிடம் பேசினேன்" என குறிப்பிட்டுள்ளார்.