டெலிவரி ஊழியர்களுக்கு விநியோக நேர கெடு விதிப்பதை கைவிட வேண்டும் என்ற மத்திய அரசின் கோரிக்கையை ஸ்விக்கி, ஜொமாட்டோ போன்ற நிறுவனங்கள் ஏற்றுள்ளன. ஊழியர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இனி அவசரமான நேர கட்டுப்பாடுகள் இன்றி டெலிவரி பணிகள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.