பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு தடை விதிக்க கோரிக்கை

1பார்த்தது
பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு தடை விதிக்க கோரிக்கை
தமிழர் மரபு காக்க, தமிழ்க் கலாச்சாரத்திற்கு எதிரான, விஜய் தொலைக்காட்சியின் பிக்பாஸ் நிகழ்ச்சியைத் தடை செய்ய வேண்டும் என தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவரும், பண்ருட்டி தொகுதி எம்எல்ஏவுமான வேல்முருகன் வலியுறுத்தியுள்ளார். அவரது எக்ஸ் பதிவில், 'பிக்பாஸ் என்பது தமிழர் பண்பாட்டை அழிக்கும் வணிக நச்சு. இதைத் தமிழக அரசு உடனடியாகத் தடை செய்ய வேண்டும்' என வலியுறுத்தியுள்ளார்.

தொடர்புடைய செய்தி