நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி போராடிய
காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி கைது செய்யப்பட்டதற்கு தமிழக வெற்றிக் கழகம் கண்டனம் தெரிவித்துள்ளது. டெல்லியில் ஜனநாயகம் நசுக்கப்படுவதாக குற்றம்சாட்டிய தவெக, மக்கள் மற்றும் மாணவர்களின் குரலை ஒடுக்குவது ஏற்க முடியாது என தெரிவித்துள்ளது.
நீட் தேர்வால் மாணவர்கள் எதிர்கொள்ளும் பாதிப்புகளை கருத்தில் கொண்டு, தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும் என்றும் தமிழக வெற்றிக் கழகம் வலியுறுத்தியுள்ளது.