இந்திய அஞ்சல் துறை சார்பில் தேசிய அளவிலான கடிதம் எழுதும் போட்டி செப்.8 முதல் டிச.8 வரை நடத்தப்படுகிறது. இந்த போட்டியில் அனைத்து வயதினரும் பங்கு பெறலாம். போட்டிக்கான கடிதத்தை, "எனது முன்மாதிரிக்கு கடிதம்" என்ற தலைப்பில் தமிழ், ஆங்கிலம் மற்றும் ஹிந்தி இவற்றில் ஏதாவது ஒரு மொழியில் எழுதி 'முதன்மை அஞ்சல் துறை தலைவர், தமிழ்நாடு வட்டம், சென்னை 600002 என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும். மாநில அளவில் முதல் பரிசு ரூ.25,000, தேசிய அளவில் முதல் பரிசு ரூ.50,000 என பரிசுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.