திருப்பதியில் பக்தர்கள் கூட்டம்: 30 மணி நேர காத்திருப்பு

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கோடை விடுமுறை காரணமாக பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது. வைகுந்தம் அறைகள் நிரம்பி, காத்திருப்பு அறைகளை தாண்டி சுமார் 3 கிலோமீட்டர் தூரம் வரை பக்தர்கள் தரிசனத்திற்காக காத்திருந்தனர். நேற்று 86,315 பேர் தரிசனம் செய்தனர், உண்டியலில் ரூ.3.94 கோடி காணிக்கை வசூலானது. பக்தர்கள் தங்கும் அறை கிடைக்காமல் அவதியடைந்தனர்.
