திருவண்ணாமலையில் 4 மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்த பக்தர்கள்

4348பார்த்தது
விடுமுறை தினத்தை முன்னிட்டு திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் இன்று (மே 24) பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்வதற்காக குவிந்தனர். பொது மற்றும் கட்டண வரிசைகள் அனைத்திலும் மக்கள் கூட்டம் அலைமோதியதால், பக்தர்கள் சுமார் 4 மணி நேரத்திற்கும் மேலாக நீண்ட வரிசையில் பொறுமையுடன் காத்திருந்து அண்ணாமலையாரை வழிபட்டனர். கோடை வெயிலையும் பொருட்படுத்தாமல் வருகை தந்த பக்தர்களின் வசதிக்காகக் கோயில் நிர்வாகம் சார்பில் குடிநீர் மற்றும் அடிப்படை வசதிகள் செய்யப்பட்டிருந்தன.

நன்றி:News18

தொடர்புடைய செய்தி