ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில்
தனுஷ், சாய் பல்லவி, ஸ்ரீலீலா மற்றும் மம்முட்டி நடிப்பில் உருவாகி வரும் 'ஓம்' திரைப்படம் வரும் அக்.16-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. இத்திரைப்படத்தின் 'அலாக்கா லோவா' என்ற முதல் பாடலின் புரோமோ தற்போது வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. இப்பாடலின் முழு வீடியோ நடிகர் தனுஷின் பிறந்தநாளான நாளை (ஜூலை 28) அதிகாரப்பூர்வமாக வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.