இயக்குனர் விக்னேஷ் ராஜா இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள 54வது படமான ‘டி54’ படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது. வேல்ஸ் பிலிம்ஸ் இண்டர்நேஷனல்ஸ் தயாரிப்பில், மமிதா பைஜு நாயகியாக நடித்துள்ள இப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைத்துள்ளார். இதற்கிடையில், இயக்குனர் ஆனந்த் எல். ராய் இயக்கத்தில் கிரித்தி சனோன் நாயகியாக நடித்துள்ள ‘தேரே இஷ்க் மே’ திரைப்படத்தின் ப்ரமோஷன் பணிகள் தனுஷ் ஈடுபட்டுள்ளார். இந்த படம் நவம்பர் 28 அன்று வெளியாகிறது.