
தர்மபுரி: ரேஷன் அட்டைதாரர்களுக்கு முக்கிய தகவல்
தர்மபுரிமாவட்டத்தில் நவம்பர் மாதத்திற்கான மாதாந்திர பொது விநியோகத் திட்ட மக்கள் குறைதீர் முகாம் நாளை (நவம்பர் 8) அனைத்து தாலுகா அலுவலகங்களிலும் நடைபெறவுள்ளது. ரேஷன் கார்டில் பெயர் திருத்தம், நீக்கம், முகவரி மாற்றம் போன்ற பல்வேறு சேவைகளை இந்த குறைதீர் கூட்டத்தில் விண்ணப்பம் அளித்து பெற்றுக்கொள்ளலாம் என மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.














