தருமபுரியில் 50 குடும்பங்கள் பௌத்தம் தழுவினர்

1பார்த்தது
தருமபுரி மாவட்டம், தம்மபூமி புத்தவிகாரில் தமிழ்நாடு பௌத்த அறநெறியாளர் சங்கம் சார்பில் தம்ம சக்கர பரிவர்த்தன தினவிழா கொண்டாடப்பட்டது. இதில், பாபாசாகேப் அம்பேத்கர் பௌத்தம் தழுவிய நாக்பூருக்கு புனித பயணம் மேற்கொண்ட உபாசகர்களுக்கு பாராட்டு விழா நடைபெற்றது. இந்த விழாவில், 50 குடும்பங்கள் பகவன் புத்தர் வழியில் பௌத்தம் தழுவின. அவர்களுக்கு மதமாற்ற சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. சங்க பொறுப்பாளர்கள், உறுப்பினர்கள் மற்றும் 50க்கும் மேற்பட்ட பௌத்த குடும்பங்கள் இதில் கலந்துகொண்டனர்.

தொடர்புடைய செய்தி