நல்லம்பள்ளி அருகே விவசாயி தற்கொலை காவல்துறை விசாரணை

66பார்த்தது
தர்மபுரி மாவட்டம், மற்றும் சட்டமன்ற தொகுதி நல்லம்பள்ளி வட்டத்துக்கு உட்பட்ட மாணிக்கம் புதூர் கிராமத்தை சேர்ந்தவர் பச்சையப்பன் விவசாயி. இவருடைய மனைவி கடந்த மாதம் இறந்து விட்டார். பச்சியப்பனுக்கு 3 மகன்களும், 4 மகளும் உள்ளனர். இந்த நிலையில் மாணிக்கம் புதூர் சுடுகாட்டு பகுதியில் உள்ள மரம் ஒன்றில் பச்சையப்பன் நேற்று மாலை தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற ஒரு காவல்து றையினர் பச்சையப்பனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து தொப்பூர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி