தருமபுரி புதிய புறநகர் பேருந்து நிலையத்திலிருந்து வரும் பயணிகளிடமிருந்து கூடுதல் கட்டணம் வசூலிப்பதாக கிடைத்த தகவலின் பேரில், வியாழக்கிழமை வட்டாரப் போக்குவரத்து அதிகாரி ஜெயதேவராஜ் மற்றும் மோட்டார் வாகன ஆய்வாளர் தரணிதரன் ஆகியோர் சோதனையில் ஈடுபட்டனர். பயணிகளிடம் அதிக கட்டணம் வசூல் செய்த 13 ஆட்டோக்கள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும், ஒவ்வொரு ஆட்டோ ஓட்டுநருக்கும் ரூ. 20,000 அபராதம் விதிக்கப்பட்டது. வாகன விதிமுறைகளை மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என ஓட்டுநர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டது.