தருமபுரி அருகே சின்னகுரும்பட்டி கிராமத்தில் வியாழக்கிழமை இறந்த வெற்றிலை வியாபாரி ராஜா இறுதி ஊர்வலத்தின்போது, வெள்ளிக்கிழமை பட்டாசு வெடித்துச் சிதறியதில் 6 பேர் காயமடைந்தனர். ஆட்டோவில் பட்டாசுகளை அடுக்கிக்கொண்டு வரிசையாக வெடித்துச் சென்றபோது, எதிர்பாராத விதமாக மேலே சென்ற பட்டாசு மின்கம்பியில் சிக்கி ஆட்டோ மீது விழுந்து வெடித்ததில் இந்த விபத்து ஏற்பட்டது. காயமடைந்த பெரமன், தங்கம், பாஸ்கர், திருப்பதி, சதீஷ், மயில்தேவன் ஆகியோர் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.