தர்மபுரி: விதிகளை மீறிய வாகனங்களுக்கு 7. 41 லட்சம் அபாரதம்

0பார்த்தது
தர்மபுரி: விதிகளை மீறிய வாகனங்களுக்கு 7. 41 லட்சம் அபாரதம்
அரூர் மோட்டார் வாகன ஆய்வாளர் தரணிதார் மற்றும் ஆய்வாளர்கள், அரூர் பைபாஸ் சாலை, கோபிநாதம்பட்டி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த மே மாதம் நடத்திய சோதனையில், ஆட்கள் அதிகமாக ஏற்றி வந்த, உரிய அனுமதி இன்றி அதிக பாரம் ஏற்றிய, அதிக ஒலி எழுப்பிய என விதிமுறைகளை மீறிய 106 வாகனங்களுக்கு ரூ. 7,41,300 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. மேலும், ஆவணங்கள் இன்றி இயக்கப்பட்ட 19 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக நேற்று செவ்வாய்க்கிழமை மாலை ஆய்வாளர் தரணிதார் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி