தர்மபுரி: தொப்புரில் அருகே கன்டெய்னர் லாரி கவிழ்ந்து விபத்து

0பார்த்தது
தர்மபுரி: தொப்புரில் அருகே கன்டெய்னர் லாரி கவிழ்ந்து விபத்து
பஞ்சாப்பில் இருந்து திண்டுக்கல் மாவட்டத்திற்குச் சென்ற கன்டெய்னர் லாரி, உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த ஓட்டுநர் பாரூக் ஓட்டி வந்த நிலையில், தர்மபுரி தொப்பூர் கணவாய் வளைவில் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் தாறுமாறாக ஓடி சாலையோரம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் ஓட்டுநர் மற்றும் கிளீனர் காயமின்றி உயிர் தப்பினர். இதனால் தர்மபுரி-சேலம் தேசிய நெடுஞ்சாலையில் சுமார் 2 மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இது குறித்து தொப்பூர் காவலர்கள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி