தர்மபுரி: வேகத்தடையால் ஏற்படும் விபத்து பொதுமக்கள் அவதி

4பார்த்தது
தர்மபுரி நகராட்சி அன்னசாகரம் பாலம் அருகே, நகராட்சி சார்பாக அமைக்கப்பட்ட வேகத்தடையால் கடந்த இரு தினங்களில் மூன்று பேர் விபத்தில் சிக்கி காயமடைந்துள்ளனர். இதற்கு முன்னர் இதே இடத்தில் வேகத்தடை அமைக்கப்பட்டதால் தொடர் விபத்துகள் ஏற்பட்டன. அப்போது தர்மபுரி சட்டமன்ற உறுப்பினர் வெங்கடேஸ்வரன் நடவடிக்கை எடுத்து வேகத்தடையை அகற்றினார். ஆறு மாதங்களுக்குப் பிறகு மீண்டும் நகராட்சி அதிகாரிகள் வேகத்தடை அமைத்துள்ளனர். இதனால் விபத்தில் காயமடைபவர்களின் மருத்துவ செலவை நகராட்சி ஏற்குமா என சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

தொடர்புடைய செய்தி