தருமபுரியில் தனியார் தொலைக்காட்சி நடத்திய தேர்தல் வாக்குறுதிகள் குறித்த நேரலை விவாத நிகழ்ச்சியில் திமுக மாவட்ட செயலாளர் எம்பி. ஆ. மணி, அதிமுக மாவட்ட செயலாளரும் எம்எல்ஏ கேபி. அன்பழகன், நாதக மாநில ஒருங்கிணைப்பாளர் சந்தோஷ்குமார் பங்கேற்றனர். தங்கள் கட்சி ஆட்சியில் செய்த சாதனைகள் குறித்து மூவரும் பேசிக்கொண்டிருந்தபோது கருத்து மோதல் ஏற்பட்டது. இதனால் ஆவேசமடைந்த அதிமுக-திமுக தொண்டர்கள் ஒருவரையொருவர் தாக்கிக்கொண்டனர். இந்த சம்பவத்தால் தருமபுரியில் பதற்றம் நிலவுகிறது.