தர்மபுரி, பாப்பிரெட்டிப்பட்டி பகுதிகளுக்கான கிழக்கு மாவட்ட செயலாளராக அசோகன், மேற்கு மாவட்ட செயலாளராக அன்பழகன் நியமிக்கப்பட்டுள்ளனர். இதனைத் தொடர்ந்து, வெள்ளிக்கிழமை அன்று தருமபுரி அதிமுக புதிய மாவட்ட செயலாளர்களை ஆயிரக்கணக்கான கட்சித் தொண்டர்கள் உற்சாகமாக வரவேற்றனர். தருமபுரி பெரியார் சிலை மற்றும் அம்பேத்கர் சிலைகளுக்கு மாவட்ட செயலாளர்கள் அன்பழகன், அசோகன் மாலை அணிவித்தனர். அதைத் தொடர்ந்து, தர்மபுரி நான்கு ரோட்டில் இருந்து ஊர்வலமாக அதிமுக கட்சி அலுவலகத்திற்கு வந்தடைந்தனர்.