தர்மபுரி: அமமுக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்

269பார்த்தது
தர்மபுரி மாவட்ட அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் வளர்ச்சி பணிகள் மற்றும் முன்னாள் முதல்வர் ஜெ ஜெயலலிதாவின் 78வது பிறந்த நாளை சிறப்பாக கொண்டாடுவது குறித்து நேற்று புதன்கிழமை மாலை ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. மாவட்ட செயலாளர் D. K. ராஜேந்திரன் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், முன்னாள் எம்எல்ஏ ஆர். ஆர். முருகன், மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர் கழக செயலாளர்கள், நிர்வாகிகள், சார்பு அமைப்பு மாவட்ட செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள், பொதுக்குழு உறுப்பினர்கள் பங்கேற்றனர். மாவட்ட வளர்ச்சிப் பணிகளை தீவிரப்படுத்துவது குறித்தும் விவாதிக்கப்பட்டது.

தொடர்புடைய செய்தி