தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளி வட்டத்துக்கு உட்பட்ட தொப்பூர் கணவாய் பகுதிகளில் நடைபெற்று வரும் உயர்மட்ட மேம்பாலப் பணிகளை பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் இன்று வியாழக்கிழமை பிற்பகல் நேரில் சென்று ஆய்வு செய்தார். அங்குள்ள பணியாளர்களிடம் பணிகளின் விவரங்களை கேட்டறிந்தார். இந்த ஆய்வின்போது தர்மபுரி எம்எல்ஏ மற்றும் பாமக முக்கிய நிர்வாகிகள் உடனிருந்தனர்.