தருமபுரி மாவட்டம் அதியமான்கோட்டை துணை மின் நிலையம் மற்றும் வெள்ளிச் சந்தை துணை நிலையத்தில் நாளை வியாழக்கிழமை மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் நிறுத்தம் செய்யப்பட உள்ளது. இதனால் அதியமான்கோட்டை, குமரகிரி ஸ்பின்னிங் ஆலை, ஏலகிரி, பாளையம்புதூர், தடங்கம், ரெட்டிஅள்ளி, நல்லம்பள்ளி, நீதிமன்ற வளாகம், தோக்கம்பட்டி, இளளிகம் மற்றும் வெள்ளிச்சந்தை, பாலக்கோடு, கூட்டுறவு சர்க்கரை ஆலை பகுதி, எர்ரனஅள்ளி, கடமடை, கொல்லஅள்ளி, பேளாரஅள்ளி, எண்டப்பட்டி, மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் மின் விநியோகம் தடைபடும் என செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்.