உலகெங்கும் உள்ள கத்தோலிக்க கிறிஸ்தவர்கள் இன்று சாம்பல் புதன் தினத்தை அனுசரிக்கிறார்கள். இதன் மூலம் 40 நாட்களுக்கு தவக்கால நோன்பு அனுசரிப்பது வழக்கம். நல்லம்பள்ளி வட்டம் கோவிலூரில் உள்ள 200 ஆண்டுகள் பழமை வாய்ந்த புனித சவேரியார் தேவாலயத்தில் பங்கு தந்தை ஆரோக்கியசாமி, உதவி பங்குத்தந்தை பெனடிக்ட் தலைமையில் திருப்பலி நடைபெற்றது. இதில் குருத்தோலை சாம்பலில் நெற்றியில் சிலுவை அடையாளம் வரைந்து வழிபாடு நடந்தது. இன்று முதல் இயேசு உயிர்ப்பு பெறுவிழா வரை இந்த தவக்கால நோன்பு அனுசரிக்கப்படுகிறது.