தர்மபுரி மாவட்டத்தில் சட்டமன்ற பொதுத்தேர்தலில் 100% வாக்குப்பதிவை வலியுறுத்தி மாவட்ட நிர்வாகம் சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன. இதன் ஒரு பகுதியாக, நேற்று புதன்கிழமை தர்மபுரி மாவட்ட விளையாட்டு அரங்கில் மாவட்ட ஆட்சியர் சதீஷ் தலைமையில் வாக்களிப்பது குறித்த விழிப்புணர்வு மாரத்தான் போட்டி நடைபெற்றது. இதில் பள்ளி, கல்லூரி மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்துகொண்டனர். வெற்றி பெற்றவர்களுக்கு மாவட்ட ஆட்சியர் பரிசுகளையும் கோப்பைகளையும் வழங்கினார்.