தர்மபுரி பாஜக அலுவலகத்தில் ஞாயிற்றுக்கிழமை இரவு, மாநில துணை தலைவர் கேபி ராமலிங்கம் தலைமையில், நவ. 08 அன்று தர்மபுரி மாவட்டத்திற்கு பிரச்சார பயணம் மேற்கொள்ள வரும் மாநில தலைவர் நைனார் நாகேந்திரனை வரவேற்பது குறித்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த அவர், "இந்தியாவின் வலிமைமிக்க தலைவர் நரேந்திர மோடி அவர்கள், அதனால் தான் அவர் நம் அனைவருக்கும் தலைவராக உள்ளார்" என்று தெரிவித்தார். இதில் ஏராளமான பாஜக நிர்வாகிகள் பங்கேற்றனர்.