டெல்லி குண்டுவெடிப்பைத் தொடர்ந்து, தர்மபுரி மாவட்டத்தில் 4வது நாளாக வியாழக்கிழமை தர்மபுரி நகர பேருந்து நிலையம், அதன் சுற்றுவட்டாரப் பகுதிகள், மொரப்பூர் மற்றும் பொம்மிடி ரயில் நிலையங்களில் பொதுமக்கள் அதிகம் நடமாடும் இடங்களில் காவலர்கள் குண்டு பரிசோதனை கருவி மூலம் சோதனை செய்து வருகின்றனர். தர்மபுரி மாவட்ட எஸ்.பி. மகேஸ்வரன் உத்தரவின் பேரில் இந்த சோதனை நடைபெறுகிறது. சத்தியகுமார், முருகன் உள்ளிட்ட காவலர்கள் இதில் ஈடுபட்டுள்ளனர்.