தர்மபுரி நகரப் பகுதியில் உள்ள தேசிய மயமாக்கப்பட்ட வங்கி ஒன்றில், வடிவேல் என்பவர் பணம் செலுத்த முயன்றபோது, அதில் 4,800 ரூபாய்க்கு 200 ரூபாய் கள்ள நோட்டுகள் இருந்தன. இது குறித்து வங்கி கிளை மேலாளர் மலர்விழி, வெள்ளிக்கிழமை தர்மபுரி நகர காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில், காவலர்கள் வடிவேலை கைது செய்து விசாரணை நடத்தினர். பழைய இருசக்கர வாகனங்கள் வாங்கி விற்பனை செய்யும் வியாபாரியான வடிவேலுக்கு கள்ள நோட்டுகள் எப்படி வந்தன என்பது குறித்து காவலர்கள் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.